Saturday, April 7, 2018

6வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018 : சிறப்பம்சங்கள்

6வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட & குறும்படவிழா 2018

15-19 ஏப்ரல், மாக்ஸ் முல்லர் பவன், சென்னை

திரையிடல், சிறப்புரை & கலந்துரையாடல்

A still from "FireFlies" by Johnson Rajkumar

50 படங்கள் கீழ்க்கண்ட பிரிவுகளில் திரையிடப்படவுள்ளன:
1) ரெட்ரோ (திரும்பிப்பார்த்தல்) : மூத்த இயக்குநர் சஞ்சய் மகரிஷி (புது தில்லி) இயக்கிய படங்கள்; அவருடன் கலந்துரையாடல்
2) மூத்த திரைப்பட விமர்சகர் அம்ரித் காங்கர் (மும்பை) அளிக்கும் சிறப்புரை மற்றும் தேர்ந்தளிப்பு /படத்திரையிடல்
தலைப்பு : "மாறாத அடிப்படை" ராபர்ட் ப்ரெச்சான் - மணி கெளல் - அமித் தத்தா
3) நினைவு கூர்தல் : இந்திய ஆவணப்பட உலகின் மூத்த நட்சத்திரங்களில் ஒருவரான சுக்தேவ் இயக்கிய படங்கள்; பிலிம்ஸ் டிவிசன் தயாரித்தவை
கருத்துப்பகிர்வு: சதானந்த் மேனன், விமர்சகர்
4) கவனத்துக்குரிய இயக்குனர்: சாஜியா கான் (காஷ்மீர்) இயக்கிய ஆவணப்படங்கள். இந்திய இஸ்லாமியர்கள் பற்றிய பண்பாட்டுப்புரிதலைக் கொடுக்கும் படங்கள்.
5) கவனத்துக்குரிய இயக்குனர்: பெர்ன் லூட்ஸ்லர் (ஜெர்மனி) இயக்கிய 35மிமீ வடிவப் பரிசோதனைப் படங்கள்
6) ஓவியர்கள் இயக்கிய படங்கள்: மூத்த விமர்சகர் சி.எஸ்.வெங்கிடேஸ்வரன் (கேரளா) சிறப்புரை மற்றும் தேர்ந்தளிப்பு/திரையிடல்
7) சமீபத்திய தமிழ்நாட்டு ஆவணப்படங்கள் & குறுப்படங்கள்
தேர்வு: அருண்மொழி, ஜோஸ்பின் டேவிட் & ஹரி
8) சமீபத்திய இந்திய ஆவணப்படங்கள்
தேர்ந்தளிப்பு : அமுதன் ஆர்.பி.
9) சமீபத்திய பன்னாட்டு ஆவணப்படங்கள்
தேர்ந்தளிப்பு: அமுதன் ஆர்.பி.
அமைப்பு: மறுபக்கம் & மாக்ஸ் முல்லர் பவன், சென்னை
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!

No comments:

Post a Comment

12th CIDSFF 24 : Winners

12th CIDSFF 24 : Award winners 1) Documentary Shubradeep Chakravorthy Memorial Award for  Best Indian Long and Medium Length Documentary  Dr...