Monday, March 1, 2021

9th Chennai Film Festival 2021 : Tamil films


9வது சென்னை சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவில்

தேர்வு செய்யப்பட்ட படங்கள் : 

1. ஐ யம் எ செக்குலரிஸ்ட் [ ஆவணப்படம்]


கதைக்கரு: இந்த ஆவணப்படம், தோழர் சிநேகா பார்த்திபராஜா அரசியல் சக்திகளிடம் சாதிமதம் மறுப்பு சான்றிதழ் பெற பத்து வருடம் போராடிய வரலாறை விவரிக்கிறது.

தொகுப்பு மற்றும் இயக்கம் - சூர்ய குமார் ஆறுமுகம்.


2. சாதி சனம்


கதை: இன்னும் இந்திய கிராமங்களில் தீண்டாமை நிலவுகிறது என்பதை உணர்த்தும் கதை.

எழுதி இயக்கியவர்: எஸ்.கார்த்திக் தமிழ்பிரியன்.


3. காரணம்

இயக்கம்: விக்னேஷ் பவித்திரன்.


கதைக்கரு:

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய சிறுகதை "காரணம்", நகரம் தொகுப்பில் 1971 ஆம் ஆண்டு வெளியானது

பெற்றோர்களின் நடத்தையால் அவர்களது மகன் எப்படி உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதை விளக்கும் கதை.


4. நான் யார்

எழுத்து,இயக்கம்: நிர்மல் நிர்மி.


கதைக்கரு: வலியவர்கள் எளியவர்களை வேட்டையாடும் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதை.


5. நான் பேச நினைப்பதெல்லாம்

எழுத்து,இயக்கம்:நேசமணி.


நேரடி ஒலிப்பதிவு மற்றும் ஒலி வடிவமைப்பு:செந்தில் குமரன் சண்முகம்.

கதைக்கரு: இரு நண்பர்களுக்கிடையே இருந்தது நட்பா…காதலா…என்பதை விவரிக்கிறது திரைக்கதை.


6. லட்சுமி விலாஸ்

இயக்கம்: சோமசுந்தரம்.


கதைக்கரு: ஆணதிக்க சமூகத்தில் பெண்கள் வதை நிரந்தர வாதை என்பது உண்மை.

பெண்ணுரிமைக்கான குரலும் ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பாலாக மறைந்து போகும் உண்மையையும் உரைக்கிறது.


7. பார்வை

எழுத்து,இயக்கம்: டினு [ டி.தினேஷ்குமார்]


கதைக்கரு: ஆணாதிக்க கோணல் பார்வையை நேராக்க முயலும் கதை.


8. மடமைக்கு அஞ்சேல்

எழுத்து&இயக்கம்: பாலமுருகன்,மலேசியா.



கதைக்கரு: மலேசியாவில் சகோதரனும் சகோதரியும் இணைந்து நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்து வருகிறார்கள்.

அவர்களை படைப்பூக்கமாக கொண்டு இந்த குறும்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆணாதிக்கத்தை விளாசி பெண் விடுதலையை பேசுகிறது.


9. பூட்ஸ்

இயக்கம்: ஆர்.சிவா.


திரைக்கதை மற்றும் தயாரிப்பு: ஆர்பி.வினு,மலேசியா.

கதைக்கரு: காவல்துறையின் அராஜக வரலாற்றின் ஒரு துளி.


10. சிரிக்கும் துர்கா

இயக்கம்: சரவணன் பழனிச்சாமி.


கதை மற்றும் திரைக்கதை: ஜி.அசோக் நவீன்.

கதைக்கரு: சமூகத்தில் இன்றும் நிலவும் குழந்தை திருமணத்தின் ஒரு சாட்சியாக திகழ்கிறது இக்கதை.


11. சவுண்டு

திரைக்கதை&இயக்கம்:சிநேகா பெல்சின்


கதைக்கரு: அதிகார வர்க்கத்தின் அத்துமீறலையும்,அடங்கி போகும் தன்மையையும் விமர்சிக்கும் திரைக்கதை.


12.மோடி&எ பியர்

எழுதி இயக்கியவர்:தினா சந்திரமோகன்


கதைக்கரு:  ஒரு வெற்றிகரமான காதல் அரசியல் விவாதத்தால் எப்படி உடைகிறது என்பதைப் பற்றி இப்படம் பேசுகிறது.


13. எழில்

கதை,திரைக்கதை,ஒளிப்பதிவு,இயக்கம்:விமல்ராஜ்,இலங்கை.


கதைக்கரு: தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய மாவீரர்களை போற்றி பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கதை.


14.சுயரூபம்

திரைக்கதை,ஒளிப்பதிவு,நேரடி ஒலிப்பதிவு,ஒலி வடிவமைப்பு,தொகுப்பு,இயக்கம்:செந்தில் குமரன் சண்முகம்.


கதை:கு.அழகிரிசாமி.

கதைக்கரு:சாதிய பெருமிதம் சோறு போடாது என்ற எளிய உண்மையை உரைக்கும் கதை.

[உலகிலேயே முதன்முதலாக திரையிடப்படுகிறது]


நிகழ்ச்சி அமைப்பு: மறுபக்கம் அமைப்பு, மதுரை.

ஒருங்கிணைப்பாளர்: இயக்குநர் ஆர்.பி.அமுதன்.


தேர்வு செய்யப்பட்ட படங்களின் படைப்பாளிகள், தொழில்நுட்பக்கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.


அன்புடன்,

உலக சினிமா பாஸ்கரன்,

இன்ஷா அல்லாஹ் திரைப்பட இயக்குநர்.

2 comments:

  1. Anaithum Arumai agam magizhdhen I am S.B.Samy Spoken Hindi Master of Erode and also an Artist 9842407349 my mbl no

    ReplyDelete
  2. How to submit my short film to your film festival

    ReplyDelete

12th CIDSFF 24 : Winners

12th CIDSFF 24 : Award winners 1) Documentary Shubradeep Chakravorthy Memorial Award for  Best Indian Long and Medium Length Documentary  Dr...